சென்னை, ஏப்.15- கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சென்னை வர்த்தக மையத்தில் 550 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்க ளைத் தனிமைப்படுத்தி பரிசோனை நடத்த வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மற்றவர்களை 28 நாள்கள் கண்காணித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் எனவும் சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்காக பல இடங்களில் தனிமைப்ப டுத்தப்பட்ட இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை கரோனா தனிமைப்படுத் தப்பட்ட இடமாக சென்னை மாநகராட்சி மாற்றியுள்ளது. இதில், 550 படுக்கை வசதிகள் உள்ளன. படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் அமைக்கப்பட்டுள் ளன. இங்கு தங்குபவர்களுக்கு மெத்தை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியும் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.